டிரெண்டிங்

‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ - தமிழிசைக்கு சர்வதேச விருது

‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ - தமிழிசைக்கு சர்வதேச விருது

rajakannan

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்படுகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக தமிழிசை கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாஜகவின் முதல் பெண் தலைவராவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழிசையும், அவரது கணவர் சவுந்தரராஜனும் தொழில்முறை மருத்துவர்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை, இதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழக பாஜகவின் முக்கிய முகமாக அவர் தற்போது இருந்து வருகிறார்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. 

உலகளவில் பல துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றும் நபர்களை தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு மருத்துவம், சமூகம், சவாலான அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்பவர் என்பதை பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.