டிரெண்டிங்

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு இடைக்கால தடை

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு இடைக்கால தடை

rajakannan

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முதலமைச்சர் அணியினர் நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடை கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். மனு தள்ளுபடியானதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி வெற்றிவேல் எம்எல்ஏ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது. 

வெற்றிவேல் மேல்முறையீடு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை இரவு 7.15 மணிக்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், வழக்கறிஞருமான புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இடைக்காலத் தடை விதித்து பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 13-ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

எம்.எல்.ஏ வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சில மணிநேரங்களில் தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகள் சார்பில் நாளை காலை 10 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.