டிரெண்டிங்

பணக்கார எம்.பிக்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்றுங்கள்: வருண் காந்தி

பணக்கார எம்.பிக்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்றுங்கள்: வருண் காந்தி

rajakannan

பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பாஜக எம்பி வருண்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து உள்ளவர்கள். 2009-ம் அண்டு மக்களவை தேர்தலில் 315 ஆகவும், 2004 தேர்தலில் 156 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில், பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற முன் வர வேண்டும் என்று வருண்காந்தி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் பொருட்டு இத்தகைய முயற்சியை மேற்கொள்ளலாம் என்றும் அது நாட்டிற்கு நம்மைப் பற்றி நல்ல எண்ணத்தை உருவாக்கும் என்று அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “எல்லா எம்.பி.க்களும் பணக்காரர்கள் இல்லை, சிலர் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வருமானத்தை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளனர். பணக்கார எம்.பி.க்கள் சிலர் இதனை தொடங்கி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் அலவன்ஸ் ரூ.45 ஆயிரம், சொந்த அலுவலகச் செலவுக்கு ரூ.45 ஆயிரம் என்ற மொத்தம் எம்.பி.க்களுக்கு ரூ.2.7 லட்சம் செலவிடப்படுகிறது.