டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளார். 65 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற பீரிஸ்டைல் பிரிவில் அவர் அஜர்பைஜான் நாட்டு வீரர் Haji Aliyev-விடம் 12-5 என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளார்.
இந்த தோல்வியின் மூலம் அவர் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார் பஜ்ரங் புனியா. இந்த போட்டி நாளை நடைபெற உள்ளது. செனகல் அல்லது கஜகஸ்தான் நாட்டு வீரர்களை அவர் இந்த போட்டியில் எதிர்கொள்ள உள்ளார்.