தமிழகத்தில் தற்போது சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டால், தி.மு.க., ஆட்சியை பிடிக்கும், அதிமுக சரிவை சந்திக்கும் என்று, 'இந்தியா டுடே' இதழ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழக அரசியல் நாள்தோறும் புதிய புதிய மாற்றங்களை சந்தித்து வருகின்றன. தினகரன் வளர்ச்சி ஒருபுறம், ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் ஒருபுறம் என அதிரடியாக திருப்பங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் ஒரு தெளிவான அரசியல் நிலை இன்னும் எட்டப்பட்டுவிட்டதாக தெரியவில்லை. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்தியா டுடே-கார்வி சார்பில், தமிழகத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் பல்வேறு முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் 77 சட்டசபை தொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்று 10 நாட்கள் கழித்து இந்த கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில், தமிழகத்தில் தற்போது சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டால், தி.மு.க., 130 இடங்களுடன் ஆட்சியை பிடிக்கும், அதிமுக 68 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி சரிவை சந்திக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கவுள்ள ரஜினிக்கு, 33 இடங்கள் கிடைக்கும் என்றும், தினகரன், கமலுக்கு போதிய வரவேற்பு இருக்காது என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கருத்துக் கணிப்பின் சில முக்கிய அம்சங்கள் (சதவிகிதத்தில்):-
யாருக்கு எத்தனை தொகுதிகள்?
கட்சிகளின் வாக்கு சதவீதம்?
தமிழகத்தில் பாஜக நுழைய வாய்ப்புள்ளதா?
ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?
அதிமுகவில் அடுத்த முதலமைச்சர்
அதிமுக சிதைந்து போகுமா?
கமலுடன் ரஜினி கூட்டணி அமைப்பாரா?
ரஜினியின் அரசியல் எதிர்காலம்?
அரசியல் வெற்றிடத்தை கமல் நிரப்புவாரா?
ஜெ. மறைவை தொடர்ந்து அரசியல் வெற்றிடம் உள்ளதா?
திரை நட்சத்திரம் மீண்டும் தமிழக அரசியலில் ஏற்றுக் கொள்ளப்படுவார்களா?
வேற்று மாநிலத்தவர் என்பது ரஜினிக்கு எதிராகவே இருக்கும்;
தேர்தல் வந்தால் வாக்குகளுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பார்களா?