டிரெண்டிங்

கொடைக்கானலில் ரம்மியமான சூழலில் பூத்துக் குலுங்கும் காட்டுச்சேலா மலர்கள்...

kaleelrahman


கொடைக்கானலில் நிலவும் இதமான சூழலுக்கிடையில் ரம்யமாக பூத்துக் குலுங்கும் காட்டுச்சேலா மலர்கள் பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நாள்முதல், தரையில் தாழ்வாக தவழும் பனிமூட்டமும், தொடர் சாரல்மழையும் கடந்த செப்டம்பர் மாத இறுதிவரை நீடித்தது. அக்டோபர் மாதம் துவங்கிய முதல்நாளில் நீலவானத்துடன் பசுமையான சோலைகளாக காட்சிமாறி இதமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 அடர்ந்து காணப்படும் சோலை வனங்களுக்குள் காட்டுச்சேலா மலர்கள் மகர வண்ணம் தீட்டியது போல் பூத்துக்குலுங்கி, அழகான மலைப்பகுதிக்கு மேலும் அழகூட்டி மிளிரச்செய்துள்ளது. பல நூற்றுக்கணக்கான மரங்களில் காட்டுச்சேலா மலர்கள் மரம் முழுவதும் கொத்துக்கொத்தாக பூத்துக்குலுங்குவது மகர வைரம் கதிரவனின் ஒளியில் பிரகாசிப்பதை காணும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த மாதம் முழுவதும் இந்த மலர்கள் மரங்களில் பூத்துத் குலுங்கி காண்போரை கவரும் என்று, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.