டிரெண்டிங்

அரசியல் சாசனத்தில் கர்நாடகாவுக்கு தனிச்சட்டம் இல்லை: காங். ஆவேசம்

rajakannan

அரசியல் சாசனத்தில் கர்நாடகாவுக்கு தனியாக சட்டம் இல்லை என்று கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் செல்லகுமார் கூறியுள்ளார். 

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்ததை அடுத்து காங்கிரஸ் தலைமை புதிய வியூகத்தை அமைத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும் ஆட்சி அமைக்க தவறிய மாநிலங்களில் போர்க்கொடி உயர்த்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி, கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது. அதேபோல், ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை நடத்தவும் காங்கிரஸ் கட்சியினருக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் செல்லகுமார் கூறுகையில், “அரசியல் சாசனத்தில் கர்நாடகாவுக்கும், கோவாவுக்கும் தனித் தனியாக சட்டம் இல்லை. 2017ம் ஆண்டு ஆளுநர் தவறு செய்திருந்தால், அதனை தற்போது சரி செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆளுநர் நாளை காலை 11.30 மணிக்கு எங்களுக்கு நேரம் கொடுத்துள்ளார். எங்களது எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோருவோம்” என்றார்.