பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது 91ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்வானிக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவருக்கு கேதார்நாத் கோவில் பிரசாதத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ட்விட்டரிலும் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்த மோடி, இந்தியாவின் வளர்ச்சியில் அத்வானியின் பங்களிப்பு முக்கியமானது என்று குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், ராஜ்யவர்தன் ரதோர் சிங் உள்ளிட்ட பலரும் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.