டிரெண்டிங்

அர்ச்சகர் நியமனம் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின் ட்வீட்

அர்ச்சகர் நியமனம் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின் ட்வீட்

rajakannan

மதுரையில் உள்ள கோயில் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

திமுக அரசு  2006 ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்கும் அரசாணையை வெளியிட்டது. பயிற்சி நிலையங்களில் படித்து முடித்த 206 பேருக்கு மடாதிபதிகளை வைத்து தீட்சைகளும் வழங்கப்பட்டன. ஆனால், திமுக அரசின் அந்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால், பயிற்சி பெற்றவர்கள் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படாமலே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மதுரையில் உள்ள கோயிலில் 206 பேரில் ஒருவர் மட்டும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராமணர் அல்லாத ஒருவர், தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை. கடந்த 5 மாதங்களாக அவர் அர்ச்சகர் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘பல்வேறு போராட்டங்களை கடந்து மதுரையில் உள்ள கோயிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய திமுக தலைவர் கருணாநிதிக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி’ எனக் கூறியுள்ளார். இது திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.