டிரெண்டிங்

“ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகே சிலருக்கு தைரியம் வந்திருக்கிறது” - இல. கணேசன்

“ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகே சிலருக்கு தைரியம் வந்திருக்கிறது” - இல. கணேசன்

webteam

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதனை பிடிக்க இதுவே சமயம் என நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருவதாகவும் யார் வந்தாலும் பாஜகவுக்கு பாதிப்பில்லை என்று இல. கணேசன் குறிப்பிட்டுள்ளார்.  

கிருஷ்ணகிரியில் இன்று  செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனிடம், விஜய்யின் பேச்சு குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,  “ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகுதான் சிலபேருக்கு தைரியமாக பேசுவதற்கான துணிவே வந்திருக்கிறது என்றுகூட சொல்லலாம். வெற்றிடம் ஒன்று தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை.

மறைந்த இரண்டு தலைவர்களுமே சாதாரணமான தலைவர்கள் அல்ல; பெரிய ஆளுமைகள். அதன் காரணமாகவே பலபேர் நாமும் முயற்சித்தால் என்ன என்று நினைக்கலாம். எல்லோரும் கலைஞர் ஆகிவிட முடியாது. எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் நடிகர்களின் வரவால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.