டிரெண்டிங்

தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம்: மு.க.ஸ்டாலின்

தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம்: மு.க.ஸ்டாலின்

webteam

மக்களின் நலன் கருதி, தேவைப்பட்டால் தமிழக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக அணிகளுக்கு இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஜெயலலிதா இறந்தது முதலே தொடர்ந்து ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பல துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டுமென்றால் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு, “தேவைப்பட்டால் கொண்டுவருவோம்” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.