டிரெண்டிங்

ரூ.2 ஆயிரம் கொடுத்தால் விஜயபாஸ்கர் மருத்துவமனையில் சேர்வாரா?

ரூ.2 ஆயிரம் கொடுத்தால் விஜயபாஸ்கர் மருத்துவமனையில் சேர்வாரா?

rajakannan

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டாயிரம் ரூபாய் இருந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் சாதாரண மருத்துவமனையில்
சேர்வாரா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். 
 
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜயகாந்த் நேரில்
சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். அந்த வகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் டெங்கு காய்ச்சல்
பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி
போதாது என்றும் இரண்டாயிரம் ரூபாய் இருந்தால் விஜயபாஸ்கர் சாதாரண மருத்துவமனையில் சேர முடியுமா? என்றும்
கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழகத்தில் மட்டும் டெங்கு இல்லை, இந்தியா முழுவதும் டெங்கு பாதிப்பு உள்ளது. டெங்கு
காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். தமிழகத்தில் மத்தியக் குழு தாமதமாக வந்து ஆய்வு செய்துள்ளது.
டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் தேவை. இந்த விவகாரத்தில் அமைச்சர்
விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய தேவையில்லை.
 
இந்த விவகாரத்தில் போராட்டம் செய்வதால் என்ன நடந்துவிடப் போகிறது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை
காலங்களில் காய்ச்சல் வரும் என்பது தெரிந்தும் ஏன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. டெங்குவை
கட்டுப்படுத்துவதை விட ஆட்சியை காப்பாற்றுவதிலே குறிக்கோளாய் உள்ளனர்” என்று கூறினார்.