டிரெண்டிங்

"சமாஜ்வாதி ஆட்சியமைந்தால் ஏழைகளுக்கு ரூ. 10 க்கு உணவு" - அகிலேஷ் யாதவ் வாக்குறுதி

"சமாஜ்வாதி ஆட்சியமைந்தால் ஏழைகளுக்கு ரூ. 10 க்கு உணவு" - அகிலேஷ் யாதவ் வாக்குறுதி

Veeramani

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், சமாஜ்வாதி கிரானா எனப்படும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் கடைகள் நிறுவப்பட்டு மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் மற்றும் இதரப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வோம் என தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில், பாரதிய ஜனதா இதுவரை 82 கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக, அகிலேஷ் யாதவ் பதில் அளித்துள்ளார்.