டிரெண்டிங்

முதலமைச்சர் பதவி கடையில் கிடைத்தால் ஸ்டாலினுக்கு வாங்கி தருவேன்: அமைச்சர் ஓ.எஸ் மணியன் கிண்டல்

முதலமைச்சர் பதவி கடையில் கிடைத்தால் ஸ்டாலினுக்கு வாங்கி தருவேன்: அமைச்சர் ஓ.எஸ் மணியன் கிண்டல்

rajakannan

முதலமைச்சர் பதவியை கடையில் விற்பனை செய்தால் மு.க.ஸ்டாலினுக்கு தாமே அதை வாங்கி தருவதாகக் கூறியிருக்கிறார் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

சென்னை தேனாம்பேட்டைல் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். “சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக வேண்டாம் என அப்போதே நான் கடிதம் அளித்தேன் சசிகலா அனுமதியோடு' என்ற பெயரில் டிடிவி தினகரன் தானாக அறிவிப்புகளை வெளியிடுகிறார். டிடிவி தினகரனிடம் கட்சியை கொடுக்க முடியாது” என்றார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் மனு அளித்தனர். ஆனால் இந்த மனு மீது ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறப்பட்டு வருகிறது.