இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வலியுறுத்துவோர், சர்வாதிகாரியாக சித்தரிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட்ட பிறகு பேசிய பிரதமர், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கட்டுபாடு மிக்கவர் என்றும் அவர் வலியுறுத்தும் ஒழுக்கங்களை அவரே பின்பற்றுபவர் என்றும் அவர் கூறினார்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கத்தை வலியுறுத்துபவர் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்படுவதுடன், அகராதியிலிருக்கும் பல பெயர்களும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டர். வெங்கையா நாயுடுவிடம் எந்தப் பொறுப்பை வழங்கினாலும் அதை சிறப்பாக செயல்படுத்துபவர் என்று புகழ்ந்தார்.