டிரெண்டிங்

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச்சென்றுவிடுவார் நளினி: தமிழக அரசு

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச்சென்றுவிடுவார் நளினி: தமிழக அரசு

rajakannan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினியை 6 மாதம் பரோலில் அனுப்பினால் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது என்று தமிழக உள்துறை பதில் மனு தாக்கல் செய்தது. 6 மாதம் பரோலில் அனுப்பினால் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

26 ஆண்டுகள் சிறையில் உள்ளதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று நாடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதால், நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.