டிரெண்டிங்

“பாஜகவினரை திமுக இழுத்தால் நாங்களும் அவர்களை இழுப்போம்”- கருப்பு முருகானந்தம்

kaleelrahman

கட்சி நிகழ்ச்சியில் பங்குபெற வேதாரண்யம் வந்த பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில்ல் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதன் மூலம் இந்திய நாட்டில் இந்துக்கள் மனதில் இருந்த மிகப்பெரிய வேதனை நீங்கி உள்ளது


பதவி தருகிறேன் என பேரம் பேசி பல வாக்குறுதிகளை தந்து குறுக்கு வழியில் பா.ஜ.கவிலிருந்து யாரையும் திமுக இழுக்க நினைத்தால் அதே வழியை கையாண்டு திமுகவிலிருந்து பல சட்டமன்ற உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சி இழுக்கும். அடுத்த நாட்டிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த கட்சி பாரதிய ஜனதா கட்சி. தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது பெரிய விஷயம் கிடையாது. திமுக இதை உணர்ந்து கொள்ள வேண்டும்


தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை மாநில அரசு கடைபிடித்தால் எந்த தனியார் பள்ளியிலும், கல்லூரியிலும் இரு மொழிக்கு மேல் எந்த பாடமும் இருக்காது என சட்டம் இயற்ற வேண்டும். பாஜக இதை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தும். வேலை வாய்ப்பு பெற மும்மொழிக் கொள்கையை மாநில அரசும் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பா.ஜ.கவிலிருந்து சென்றவர்கள் மீது தான் வருத்தம். கட்சி மீது வருத்தம் இல்லை என நயினார் நகேந்திரன் ட்விட்டரில் தெளிவாக பதிவிட்டுள்ளதால் கட்சி மீது அவருக்கு வருத்தம் இல்லை எனத் தெரிவித்தார்.