காவிரி நீர்தான் வேண்டுமென்றால், அழுது புலம்பி கொண்டிருக்க வேண்டியதுதான் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். “தமிழக மக்களுக்கு குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் வேண்டுமென்றால், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நான் ஏற்பாடு செய்து தருகிறேன். காவிரி நீர் வேண்டுமென்றால், அழுது, புலம்புங்கள்” என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
காவிரி நீர் வேண்டி தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் சுப்ரமணியன் சுவாமி இவ்வாறு கூறியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.