பாரதிய ஜனதாவுக்கு எதிராகச் செயல்படும் குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு எதிராக அரசியல் நோக்கத்துடன் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
போயஸ் தோட்டத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், அதிமுகவினர் தவறு செய்யவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். தவறு செய்தவர்களாக இருந்தாலும், அவர்களில் பாஜகவுக்கு ஆதரவாக உள்ள ஒரு குழுவினரை காப்பாற்றிவிட்டு, தங்களுக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது பாஜகவின் மிக மோசமான அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என அவர் கூறினார்.