டிரெண்டிங்

ஹெச்.ராஜாவுக்கு சல்யூட் செய்வேன்: சொல்கிறார் நடிகர் விஷால்..!

ஹெச்.ராஜாவுக்கு சல்யூட் செய்வேன்: சொல்கிறார் நடிகர் விஷால்..!

Rasus

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஹெச்.ராஜா போராடினால் அவருக்கு சல்யூட் செய்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது. பேருந்து கட்டண உயர்வுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா போராட்டம் நடத்தினால் அவருக்கு சல்யூட் செய்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் போராடுவது அதிருப்தியால்தான் என்றும் விஷால் குறிப்பிட்டார்.