படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம் என்று, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதியின் வேட்பாளர் பசுபதிக்கு ஆதரவாக, திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதேபோல, பொன்னேரி தொகுதி வேட்பாளர் மகேஸ்வரியை ஆதரித்து, மீஞ்சூர், பொன்னேரி ஆகிய இடங்களில் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
வாக்கு சேகரிப்பின்போது திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடியே பேசிய அவர், உழவை மீட்போம் உலகைக் காப்போம் என்ற நோக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சி தேர்தலை எதிர்கொள்வதாகக் கூறினார். ஆயிரம், ஐந்தாயிரம் கொடுப்பதாக வாக்குறுதியை அளிக்க தாம் தயாராக இல்லை என்றும், மக்கள் 50,000 ரூபாய் அளவுக்கு சம்பாதித்துக் கொள்ள அரசு வேலை தரப்படுமென உறுதியளிப்பதாக சீமான் வாக்குறுதி அளித்தார்.