திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் என்ற கிராமத்தில் இறந்துபோன தன் காளையின் நினைவாக அதே போன்ற ஒரு காளை உருவச்சிலையை உருவாக்கியுள்ளார் ஒரு விவசாயி.
வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவர் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த காராம் பசு காளை கடந்த 2018 ஆம் ஆண்டு நோய்வாய்பட்டு உயிரிழந்தது.
இறந்த காளையின் உடலை அவரது தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர். பாசமாக வளர்த்து வந்த காளை திடீரென உயிரிழந்ததை அடுத்து அதன் நினைவாக, காளையின் உடலை அடக்கம் செய்த இடத்தில் முழு உருவ சிலையை வைக்க முடிவு எடுத்தார்.
அதன்படி முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட காராம் பசு காளையின் உருவச்சிலை இன்று திறக்கப்பட்டது. 2 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த சிலை திறப்பு விழாவில் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.