டிரெண்டிங்

“அதிமுக மீது அதிருப்தியா?” - அன்வர் ராஜா எம்.பி விளக்கம்

“அதிமுக மீது அதிருப்தியா?” - அன்வர் ராஜா எம்.பி விளக்கம்

rajakannan

அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறேன் என்று கூறுவது முற்றிலும் தவறான தகவல் என்று அன்வர் ராஜா எம்.பி கூறியுள்ளார். 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆளும் அதிமுக கட்சி தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக அணியில் இடம்பெற்றுவிட்டன. தேமுதிக கூட்டணி இன்றோ  அல்லது நாளையோ உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது. 

இந்நிலையில், அதிமுக அணியில் பாஜக இடம்பிடித்தது அக்கட்சியின் மக்களவை எம்.பி அன்வர் ராஜாவிற்கு பிடிக்கவில்லை என்பது போல் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருந்தது. வேறு கட்சிக்கு அவர் மாற உள்ளதாகவும் செய்திகள் பரவியன. 

இந்த விவகாரம் குறித்து பேசிய அன்வர் ராஜா, “பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி, கொள்கை அளவிலானது அல்ல. கூட்டணி என்பது வேறு.. நட்பு என்பது வேறு. அவர்களது (பா.ஜ.க) கொள்கை வேறு. எங்கள் கொள்கை வேறு. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் நான் இருந்து வருகிறேன். கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறேன் என்று கூறுவது முற்றிலும் தவறான தகவல். யாரோ அப்படி வாட்ஸ் அப்பில் வேண்டும் என்றே வதந்தி பரப்பி வருகின்றனர். அதில் உண்மை இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “ஜெயலலிதாவிற்கு இருந்த துணிச்சல் அதிமுகவில் யாருக்கும் இல்லை. அதேபோல், கருணாநிதிக்கு சமமான தலைவரும் இப்போது இல்லை” என்று தெரிவித்தார்.