நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில், தான் நிம்மதியாக இருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார்.
பரப்பரப்பான அரசியல் சூழலில் இன்று கர்நாடக சட்டப் பேரவையில் குமாராசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும் எதிராக 105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனையடுத்து குமாராசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து குமாராசாமி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “நான் முற்றிலும் நிம்மதியாக இருக்கிறேன். தற்போது உலகின் சந்தோஷமான மனிதன் நான்தான். நான் ஓய்வு பெறமாட்டேன். தொடர்ந்து போராடுவேன். பொருத்திருந்து பாருங்கள்” என்று கூறியுள்ளார்.