டிரெண்டிங்

வெறும் வார்த்தையால் மட்டுமே ஆட்சி செய்ய முடியாது: யஷ்வந்த் சின்ஹா விமர்சனம்

வெறும் வார்த்தையால் மட்டுமே ஆட்சி செய்ய முடியாது: யஷ்வந்த் சின்ஹா விமர்சனம்

webteam

வெறும் வார்த்தையால் மட்டுமே ஆட்சி செய்ய முடியாது என பாஜக தலைமையிலான மத்திய அரசை அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார்.

பாஜகவின் செயல்பாடுகளை சமீபகாலமாக விமர்சித்து வரும் அவர், இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், உறுதியளித்தபடி அரசு செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜிஎஸ்டியும் அரசின் மிகப்பெரிய தோல்வி என்று குறிப்பிட்டுள்ளார். மிக நேர்த்தியான திட்டமான ஜிஎஸ்டி, அமல்படுத்தப்பட்ட விதத்தினால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏராளமான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள், மீண்டும் மாற்றப்பட்டிருப்பது அரசின் தோல்வியை சுட்டிக்காட்டுவதாக கூறியுள்ளார். வெறும் வார்த்தையால் மட்டுமே ஆட்சி செய்ய முடியாது. கட்சியின் தற்போதைய நிலையினால் எதிர்காலம் குறித்து கவலை எழுந்துள்ளதாக கூறியுள்ள யஷ்வந்த் சின்ஹா, குறைகளை உணர்ந்து மேம்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.