டிரெண்டிங்

“நான் பாஜகவுக்கு ஏஜெண்ட்டா?” - பதறிய திக்விஜய் சிங்

“நான் பாஜகவுக்கு ஏஜெண்ட்டா?” - பதறிய திக்விஜய் சிங்

rajakannan

வருகின்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கூட்டணி ஏற்படும் என பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், மாயாவதியின் இன்றைய பேச்சு அதற்கு செக் வைத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி “காங்கிரஸ் கட்சியோடு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி இல்லை, திக்விஜய் சிங் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார், பகுஜன் சமாஜ் கட்சியை அழித்து விட காங்கிரஸ் துடிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த திக்விஜய் சிங், “பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறேன். ராகுல் காந்திதான் எங்களுடைய தலைவர். அவரது அறிவுருத்தல்களை நாங்கள் பின் தொடர்கிறோம்.

நான் மாயாவதியை மதிக்கிறேன். தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைய வேண்டும் என விரும்பினேன். சட்டீஸ்கரில் பேச்சுவார்த்தை நடந்தது. அதனால், அவர் அதன்படி செயல்படவில்லை. மத்திய பிரதேசத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் போதே 22 வேட்பாளர்களை அவர் அறிவித்துவிட்டார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைய வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவர்களால் அந்த முயற்சி நொறுக்கப்படுகிறது” என்றார்.