மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்து வாக்காளர்களை கவர்வதற்காக பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ள பாரதிய ஜனதா 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கத்தை முன் வைத்து பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், இந்து வாக்காளர்களை கவரும் வகையில் மம்தா, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் மேற்கொண்ட பரப்புரையில் சில மந்திரங்களை உச்சரித்தார். ''தானும் ஒரு இந்துப் பெண்தான்'' என்றும் ''ஒரு நல்ல இந்து என்றால் யார் என உங்களுக்கு தெரியுமா'' என்றும் பாரதிய ஜனதாவுக்கு மம்தா எச்சரிக்கை விடுத்தார்.
மம்தாவின் இச்செயலை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். மம்தா தேர்தல் நேரத்து இந்து மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். தேர்தல் அச்சத்தில் இருக்கும் மம்தா தற்போது பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் கோயிலுக்கு போவதா அல்லது மசூதிக்கு போவதா என அவர் குழம்பிக்கிடப்பதாகவும் கிரிராஜ் தெரிவித்தார்.
இதற்கிடையில், மம்தா மந்திரத்தை தவறாக உச்சரித்துவிட்டார் என்றும் இதன் மூலம் வங்காள கலாச்சாரத்தை அவர் அவமதித்து விட்டார் என்றும் அவரை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார்.