சமந்தா - புரோட்டீன் டயட் முகநூல்
டிரெண்டிங்

நடிகை சமந்தா ரூத் பிரபு சொன்ன அந்த தகவல்.. பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!

பெண்களுக்கு உண்மையில் தினசரி எவ்வளவு புரோட்டீன் தேவை? நான் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எவ்வளவு புரோட்டீன் தினமும் சாப்பிடுகிறேன்? என்பது குறித்து விளக்கம் கொடுத்த சமந்தா..

Vaijayanthi S

நடிகை சமந்தா ரூத் பிரபு ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருக்கையில், பெண்களுக்கு உண்மையில் தினசரி எவ்வளவு புரோட்டீன் தேவை? என்பது குறித்து விளக்கம் கொடுத்தார்.

புரோட்டின் என்பது அமினோ அமிலங்களால் ஆன, உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்தாகும்.. இது உடலின் திசுக்களை உருவாக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும், சரியான செயல்பாட்டிற்கும் புரோட்டீன் அவசியமாகும். எலும்புகளை பலப்படுத்த புரோட்டின் தேவைப்படுகிறது. அத்துடன் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் அதனை சரியாக பராமரிப்பதற்கும் புரோட்டின் முக்கியம். ஆனால் இன்றைய அவசர உலகில் பல பெண்கள் அதிலும் வேலைக்கு செல்லும் இதில் கவனம் செலுத்துவதில்லை.. முக்கியமாக தாங்கள் தினசரி எவ்வளவு புரதம் உட்கொள்ள வேண்டும் என்பது பற்றி அவர்கள் யோசிப்பதுக் கூட இல்லை.. இது பற்றி விஷயம் தெரிந்தவர்களும் நாம் எவ்வளவு புதரம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு தெளிவு இல்லாமல் குழப்பத்தில்தான் உள்ளனர்..

இந்நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருக்கையில், பெண்களுக்கு உண்மையில் தினசரி எவ்வளவு புரோட்டீன் தேவை? தான் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எவ்வளவு புரோட்டீன் தினமும் சாப்பிடுகிறேன்? என்பது குறித்து விளக்கம் கொடுத்தார்.. இது பற்றி விரிவாக பார்க்கலாம்..

சமந்தா

சமீபத்தில், வெளியான ஒரு பாட்காஸ்டில், நடிகை சமந்தா ரூத் பிரபு ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரியுடன், பெண்களுக்குத் தேவையான சிறந்த புரோடீனின் அளவு எவ்வளவு, அதைத் தினமும் எடுத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி பேசினார்.. அதில், "நான் 50 கிலோ எடை உள்ளவள், ஒரு நாளைக்கு சுமார் 100 கிராம் புரோட்டீன் எனக்கு போதுமானது என்று நடிகை ஊட்டச்சத்து நிபுணரிடம் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஊட்டசத்து நிபுணர், சரிதான் என்றும் சராசரியாக சுமார் 55–60 கிலோ எடையுள்ள சராசரி இந்தியப் பெண்ணுக்கு 60–80 கிராம் புரோட்டின் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்..

தினமும் சரியான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக புரோட்டினின் இந்த அளவை உங்களால் நிச்சயமாக பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.. அதற்கு ஒவ்வொரு இந்திய பெண்களும் செய்ய வேண்டியதெல்லாம், உணவை பிரித்து உண்பதுதான். அதில் "200 கிராம் தயிர், 150 கிராம் பனீர், மூன்று கப் பருப்பு அல்லது சுமார் 600 கிராம் பருப்புடன் சேர்ந்த காய்கறிகளை சாப்பிட்டால் 80 கிராம் புரதத்தை பெறலாம் என்கிறார்.. அத்துடன் நீங்கள் தரமான புடோட்டின் பவுடரையும் எடுத்துக் கொள்ளலாம். அதனால் எளிதாக உங்களின் உடலுக்கு தேவையான முழு புரதமும் கிடைத்துவிடும் என்கிறார்..

புரதச்சத்து தரும் உணவுகள்

மேலும் அவர் கூறுகையில், சைவப் புரத உணவுகளில் பெரும்பாலும் அசைவ உணவு ஆதாரங்களை விட அதிக கார்போஹைட்ரேட்டுகளும் இருக்கின்றன. எனவே, அதற்கேற்ப உங்கள் உணவை அமைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்..

அதே சமயம், அதிகமாக புரோட்டீன் சாப்பிடுவது நல்லதல்ல என்றும் எச்சரிக்கை விடுக்கிறார் ஊட்டசத்து நிபுணர் ராஷி சௌத்ரி, யாராலும் நேரடியாக அதிக அளவு புரோடினை உடனடியாக எடுக்ககூடாது.. முதலில் குடல் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.. புரதம் சாப்பிடுவது பிரச்சினை இல்லை; ஆனால், அவர்களின் குடல் அந்த புரதத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.. அதனால்தான், நான் முதலில் குடல் சுத்திகரிப்பை பரிந்துரைக்கிறேன். இது குடல் ஆரோக்கியத்தை மீண்டும் உருவாக்க உதவுகிறது, இறுதியில் புரதத்தைத் தாங்கும் திறனை மேம்படுத்துகிறது என்கிறார்..

புரதம்

பலவீனமான குடலில் மேலும் புரதத்தைச் சேர்ப்பது என்பது, எரியும் நெருப்பில் எண்ணெயைச் சேர்ப்பது போன்றது. இது வீக்கம் வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் விளக்குகிறார். எனவே, புரதச்சத்து உட்கொள்ளலை முறையாகப் படிப்படியாக அதிகரிப்பதும், அதே சமயம் குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதும் அவசியம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகை சமந்தா அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு மயோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு தான் உண்ணும் உணவில் சரியாக இருப்பதாகவும் தனது உடலுக்கு ஏற்ற மற்றும் தன்னுடைய உடல் பிரச்சனையை குணப்படுத்துவதை ஆதரிக்கும் உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.,

Samantha

மேலும் தனது உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுப் பொருட்களின் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட சமந்தா, தனது உணவில் ப்ரோக்கோலி , காலிஃபிளவர் மற்றும் முளைக்கட்டிய பயிறு வகைகள் , அதிகமான காய்கறிகளும் அத்துடன் நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளும் அடங்கும் என்றார். அத்துடன் தனக்கு மயோசிடிஸ் இருப்பதால் சில ஆரோக்கியமான உணவுகள் தனக்கு ஆகாது என்றும் குறிப்பிட்டார். "கீரை மற்றும் குளுட்டன் உணவுகளான கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களை எடுத்துக் கொளவதில்லை என்றார்.

அதனால் ஒவ்வொரு பெண்களும் அவர்களின் உடலுக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொளவதில் கவனம் செலுத்துவது முக்கியம் எகிறார் நடிகை சமந்தா..