அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இருகட்சிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை இறுதி செய்வதிலும், தொகுதிகளை ஒதுக்குவதிலும் மும்முரம் காட்டிவருகின்றன.
முன்னதாக திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவுள்ளனர். அதில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதில் பாமகவுக்கு 23 அல்லது 24 இடங்கள் ஒதுக்கப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பாமகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2001 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 20 ஆண்டுகளுக்குப்பிறகு அதிமுகவுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை பாமக எதிர்கொள்கிறது.
இன்று அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், “பாமகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 23 இடங்கள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.