தேர்தலை எப்படி அணுகுவது என்பது குறித்தே முடிவு எடுக்காத நிலையில் அதற்குள் வேட்பாளரை எப்படி அறிவிக்க முடியும் என்று தமிழிசை கூறியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில மையக்குழுக்கூடி சென்னையில் ஆலோசனை நடத்தியது. மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயலர் எச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், முதல்கட்ட கூட்டம் முடிந்துள்ளதாகவும், மையக்குழுவின் முடிவு மத்தியக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அணுகுமுறை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அரசியல் சூழலை பொறுத்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.