டிரெண்டிங்

எனது இயக்கத்தில் இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார்: அன்னா ஹசாரே

எனது இயக்கத்தில் இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார்: அன்னா ஹசாரே

rajakannan

தன்னுடைய இயக்கத்தில் இருந்து இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்கி டெல்லியில் ஆட்சி அமைத்தார். பின்னர் கெஜ்ரிவாலுக்கும், ஹசாரேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹசாரே, வருகிற மார்ச் 23-ம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாக தெரிவித்தார். இந்த பேரணியில் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில், என்னுடைய இயக்கத்தில் இருந்து கெஜ்ரிவால் போன்றோர் இனி உருவாகமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவித்தார். 

 “நரேந்திர மோடியின் அரசாங்கம் லோக் பால் மசோதாவின் சாரத்தை தளர்த்திவிட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக இருவரும் குற்றவாளிகள். முதலாளிகளுக்கான அரசாங்கம் எங்களுக்கு தேவையில்லை. மோடி வேண்டாம், ராகுல் காந்தி வேண்டாம். விவசாயிகளின் நலன்களுக்காக பணியாற்றக் கூடிய அரசாங்கம்தான் எங்களுக்கு வேண்டும்” என்றும் அவர் கூறினார்.