டிரெண்டிங்

ஒரே நாளில் 3 சூப்பர் ஓவர்கள்: ரசிகர்களுக்கு விருந்தளித்த ஐபிஎல் போட்டிகள்.!

JustinDurai
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரே நாளில் 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின.
 
முதலாவதாக நடந்த கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா 163 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
 
 
சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. லாக்கி பெர்குசன் வீசிய அந்த ஓவரில் 2 விக்கெட்களையும் இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத். கொல்கத்தா அணி நான்கு பந்துகளில் வெற்றி இலக்கை கடந்தது.
அதன் பின் நடைபெற்ற இரண்டாவது போட்டியான மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா 176 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டதில் மீண்டும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்ததால் மீண்டும் சூப்பர் ஓவர் வீசப்பட்டது
இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை முதலில் பேட்டிங் செய்தது. பொல்லார்டு - ஹர்திக் பாண்டியா 11 ரன்கள் சேர்த்தனர்.
 
அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி, கிறிஸ் கெயில் மற்றும் மயங்க் அகர்வாலை களத்திற்கு அனுப்பி வைத்தது. கெயில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். மயங்க் அகர்வால் இரண்டு ஃபோர் விளாசினார். பஞ்சாப் அணி நான்காவது பந்தில் வெற்றி இலக்கை கடந்தது.
 
ஒரே நாளில் இரண்டு போட்டிகள் டை ஆகி, அதில் மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது ரசிகர்களை வியப்படைய வைத்தது. இந்த சீசனில் இதுவரை 4 ஆட்டங்கள் சூப்பர் ஓவரில் முடிவு அறியப்பட்டுள்ளன.