டிரெண்டிங்

ஐ.ஜே.கே, ச.ம.க, புதிய தமிழகம் பொதுச்சின்னம் கேட்டு வழக்கு: நாளைக்குள் முடிவெடுக்க உத்தரவு

ஐ.ஜே.கே, ச.ம.க, புதிய தமிழகம் பொதுச்சின்னம் கேட்டு வழக்கு: நாளைக்குள் முடிவெடுக்க உத்தரவு

webteam

ஐ.ஜே.கே, ச.ம.க, புதிய தமிழகம் கட்சிக்கு பொதுச்சின்னம் வழங்குவது பற்றி நாளைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 3 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ஏற்கெனவே கொடுத்த மனுவில் சில குறைபாடுகள் இருந்ததால் தேர்தல் ஆணையம் திருப்பி கொடுத்திருக்கிறது. அதை திருத்துவதற்கான விதிகள் இல்லாததால் இன்றே புதிய மனுவை கொடுக்க வேண்டும் என ஐ.ஜே.கேவுக்கு உத்தவிட்டிருக்கின்றனர். அதேபோல் இந்த மனுவை நாளைக்குள் பரிசீலித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதேபோல், சமத்துவ மக்கள் கட்சியும், புதிய தமிழகம் கட்சியும் பொதுச்சின்னம் கோரிய வழக்கில் இன்றைக்கு புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நாளைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.