டிரெண்டிங்

வேலூர் அருகே வயலில் திடீரென தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

வேலூர் அருகே வயலில் திடீரென தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

kaleelrahman

திருப்பத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பனிமூட்டத்தின் காரணமாக திடீரென வயல்வெளியில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூரை சேர்ந்த நகைக்கடை அதிபர் சீனிவாசன். இவர் தன்னுடைய குடும்பத்துடன் கோயம்புத்தூரிலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார். விடியற்காலையில் திருப்பத்தூர் அருகே வந்தபோது வானம் பனிமூட்டத்துடன் காணப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாதன்குட்டை என்ற பகுதியில் பைலட்கள் ஹெலிகாப்டரை பத்திரமாக தரை இறக்கி உள்ளனர். 


இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணிநேர காத்திருப்புக்குப் பின் சீதோசனநிலை சீரான பிறகு ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டு சென்றது.