டிரெண்டிங்

இன்றைய முக்கியச் செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்

jagadeesh

பயங்கரவாத சவால்களை இணைந்து முறியடிக்க இந்தியாவும் சீனாவும் உறுதி.மாமல்லபும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரதமர் நரேந்தி மோடி - ஷி ஜின்பிங் திட்டவட்டம். 

சென்னை வருகையை மறக்க முடியாது சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சு. சிறப்பான விருந்தோம்பல் அளிக்கப்பட்டதாக நெகிழ்ச்சியுடன் நன்றி.

இந்தியா - சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் குறித்து ஆலோசிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த மாமல்லபுரத்தை பிரதமர் மோடியே தேர்வு செய்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே விளக்கம்.

திமுக வாரிசு அரசியல் செய்வதாக, விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டு காவிரி நதிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகள் மீட்பு. மேலும் ஒருவரை தனிப்படைக் காவல்துறை கைது செய்தது.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா 275 ரன்களுக்கு ஆல் அவுட். 326 ரன் முன்னிலையுடன் இந்தியா ஆதிக்கம். இன்று நான்காம் நாள் ஆட்டம். 

சில மணி நேரங்களில் 10 மில்லியன் பார்வையாளர்கள், சாதனைப்படைத்த பிகில் டிரைலர்.