டிரெண்டிங்

“உலகளவில் திறமையான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் அவர்!” யாரைச் சொல்கிறார் ரவி சாஸ்திரி?

“உலகளவில் திறமையான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் அவர்!” யாரைச் சொல்கிறார் ரவி சாஸ்திரி?

ச. முத்துகிருஷ்ணன்

உலகளவில் திறமையான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் "குஜராத் டைடன்ஸ் அணியின் சுப்மன் கில்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்தாண்டு புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் 2 போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் மற்றொரு புதிய அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2வது போட்டியில் மிகவும் அனுபவம் வாய்ந்த டெல்லி கேப்பிடஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து அதிர்ச்சி அளித்தது. இந்த போட்டியில் 84 ரன்கள் குவித்து குஜராத் வெற்றிக்கு வித்திட்டவர் சுப்மன் கில். வெறும் 46 பந்துகளை மட்டுமே சந்தித்து 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி வான வேடிக்கை காட்டினார். முதல் போட்டியில் டக் அவுட் ஆன போதிலும், டெல்லிக்கு எதிராக தனது அதிரடியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சுப்மன் கில்லின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். “சுப்மன் கில் களமிறங்கிய உடன் ஸ்கோர் செய்வார். அவருக்கு அந்த பஞ்ச் கிடைத்துள்ளது. அவருக்கு நேரம் கிடைத்துள்ளது மற்றும் மைதானத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சக்தி அவருக்கு உள்ளது. அவர் இந்த விளையாட்டின் வடிவமைப்பிற்காக உருவாக்கப்பட்டவர். இது அவரது ஷாட் தேர்வு, ஸ்ட்ரைக்கை சுழற்றுவது ஆகியவை அட்டகாசமாக உள்ளது. அவர் 6 டாட் பால்கள் மட்டுமே விளையாடினார் இந்த மிகக் குறைவான டாட் பால்கள் அழுத்தத்தை நீக்கியது. அவர் தூய திறமைசாலி. அந்த பையன் இந்த நாட்டிலும் உலக கிரிக்கெட்டிலும் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவன்” என்று ரவி சாஸ்திரி கூறினார்.