சசிகலா விவகாரத்தில் பணம் சிறை வரை பாய்ந்துள்ளதாக பாரதிய ஜனதாவின் எச்.ராஜா கூறியுள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவருக்காக சிறப்பு சலுகைகள் அங்கு வழங்கப்படுவதாகவும் தனி சமையலறை அமைக்கப்பட்டு சிலர் சமையல் செய்ததாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இதுபற்றி கர்நாடக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா கூறும்போது, ‘பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் சசிகலா விவகாரத்தில் பணம் பரப்பன அக்ரஹார சிறை வரை பாய்ந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார். திமுக, அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், குடும்ப மற்றும் பண ஆட்சியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.