டிரெண்டிங்

மதமாற்ற ஏஜெண்டாக விஜயபாஸ்கர் மாறியுள்ளார்: ஹெச்.ராஜா சாடல்

மதமாற்ற ஏஜெண்டாக விஜயபாஸ்கர் மாறியுள்ளார்: ஹெச்.ராஜா சாடல்

Rasus

கிறிஸ்தவ பள்ளிகள் தான் கல்வியோடு ஒழுக்கத்தை கற்றுத்தவருதாக கூறிய அமைச்சர் விஜய பாஸ்கருக்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மதமாற்ற ஏஜெண்டாக அமைச்சர் விஜயபாஸ்கர் மாறியுள்ளதாகவும் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிட புரட்டுப் பூனை வெளியே; அண்ணாதுரை முதல்வர் ஆனவுடன் பள்ளிகளில் இருந்து நீதிபோதனை வகுப்புகளை ஒழித்து ஒழுக்கக்கேட்டை போதித்த ஈ.வெ.ரா கூட்டம், கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்று தருகின்றன என மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளனர். விஜயபாஸ்கரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார். மதமாற்ற வியாபாரம் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் மதமாற்றம் தேசிய அபாயம் எனவும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.