குட்கா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனுவில் தி.மு.க வலியுறுத்தியுள்ளது. குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்படும் நிலையில், தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று, தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. குட்கா ஊழல் வழக்கில் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.