டிரெண்டிங்

பிரதமர் மோடிக்கு அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் வாழ்த்து

webteam

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றியை நெருங்கியதால் பிரதமர் மோடிக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பெருமளவு முடிவடைந்துள்ளது. இதில் 182 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜக 100 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதேபோல் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன்படி இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றியை நெருங்கிவிட்டது.

இதற்கிடையே குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, வெற்றி சின்னமான இரட்டை விரலை காட்டினார். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி உறுதியாகிவிட்டது என்று கூறியுள்ளார். அத்துடன் பிரதமர் மோடிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.