டிரெண்டிங்

குஜராத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி பின்னடைவு

குஜராத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி பின்னடைவு

webteam

குஜராத் ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி பின்னடைவு.

குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வெளியான கருத்துக்கணிப்புகளில் அதிகமான இடங்களை பாஜகவே கைப்பற்றும் எனக் கூறப்பட்டது. ஆனால் கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக காங்கிரஸ் முன்னிலையிலும், பாஜக பின்னடைவையும் சந்தித்து வருகிறது.

குஜராத் மாநில ராஜ்கோட் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட, பாஜகவைச் சேர்ந்த அம்மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி தற்போதைய நிலவரப்படி 800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 85 இடங்களிலும், பாஜக 80 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.