டிரெண்டிங்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

webteam

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 40,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் இன்று பிற்பகல் 4:30 மணி நிலவரப்படி பாஜக வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்; 31 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்; 17 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதர வேட்பாளர்களில் 4 பேர் வெற்றி அடைந்துள்ளனர், 2 பேர் முன்னிலையில் உள்ளனர்.

குஜராத்தின் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதல்வர் விஜய் ருபானி 99,165 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுரு 59,635 வாக்குகளும் பெற்றனர். விஜய் ருபானி 39,980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மெஹ்சானா தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் நிதின் பட்டேல் 68,785 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிவாபாய் பட்டேல் 56,311 வாக்குகளும் பெற்றனர். 12,474 வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் பட்டேல் வெற்றி பெற்றுள்ளார்.