டிரெண்டிங்

“கலாம் வீட்டில் எளிமையைக் கண்டேன்”: கமல்ஹாசன்

“கலாம் வீட்டில் எளிமையைக் கண்டேன்”: கமல்ஹாசன்

webteam

கலாமின் இல்லத்திலும் இல்லத்தாரிடமும் பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கலாமின் இல்லத்திலும் இல்லத்தாரிடமும் அவர் பயணம் தொடங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தை தொடங்கியிருப்பதை பெரும்பேறாக நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கலாமின் வீட்டாரிடம் பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டதாகவும் கமல் தெரிவித்துள்ளார். முன்னதாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசனை, அவரது பேரன் சலீம் வரவேற்றார். அதன் பின்னர் அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரக்காயரை சந்தித்து நடிகர் கமல்ஹாசன் ஆசி பெற்றார். அங்கு காலை உணவு சாப்பிட்டார். கமலுக்கு கலாம் குடும்பத்தினர் சார்பில் அப்துல் கலாம் உருவம் பொறித்த நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இரவு மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியி்ன் கொடியை அறிமுகப்படுத்துவதோடு, கொள்கைகளையும் அவர் விளக்க உள்ளார்.