பரிதி தென்னரசு தாயார் NGMPC22 - 168
டிரெண்டிங்

”பணம் வேண்டாம்; அரசுப்பணி தந்தால்தான் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வோம்” - காலை இழந்த மாணவரின் தாய்!

ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி விக்னேஷ்வரனை, நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

PT WEB

மதுரையில் மின்கம்பம் விழுந்து காலை இழந்த மாணவருக்கு அரசுப்பணி வழங்குவதாக உத்தரவாதம் அளித்தால் தான், அரசின் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளப்போவதாக, பாதிக்கப்பட்டவரின் தாய் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் தேதி மின்கம்பம் விழுந்ததில் கோச்சடையைச் சேர்ந்த பரிதி விக்னேஸ்வரனின் கால் நசுங்கியது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது காலை மருத்துவர்கள் துண்டித்து அகற்றினர். ஜூடோ விளையாட்டு வீரரான அவரை, நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இழப்பீடாக மின் வாரியம் சார்பில் 3 லட்ச ரூபாயும் திமுக சார்பில் 2 லட்ச ரூபாயும் வழங்கினார். ஆனால், மகனுக்கு அரசு வேலை வழங்கினால் தான் அதைப் பெற்றுக் கொள்ளப் போவதாகக் கூறிய, தாய் தீர்த்தம், நிவாரணத் தொகையை பெற்றுக் கொண்டதற்கான கடிதத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.