பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் தினம் தினம் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிளவுபட்ட அதிமுக அணிகள் இணைந்து செயல்பட துவங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் மாணவி அனிதா மறைவிற்கு பின்னர், நீட் தேர்வு குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சியான திமுக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ஆளுநரின் வருகை முக்கியமானதாக கருதப்படுகிறது.