டிரெண்டிங்

அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர்

அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர்

webteam

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக இன்று சென்னை வருகிறார். 

அதிமுகவில் பிரிந்துள்ள இரு அணிகளும் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். மும்பையில் அவரது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு சென்னை வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக அணிகள் இணைப்பிற்கு பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் சென்னை வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் எனவும், துணை முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் இன்று பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.