டிரெண்டிங்

பாஜக அரசின் கைப்பாவையா ஆளுநர் வித்யாசாகர்? சந்தேகம் எழுப்பும் வேல்முருகன்

பாஜக அரசின் கைப்பாவையா ஆளுநர் வித்யாசாகர்? சந்தேகம் எழுப்பும் வேல்முருகன்

Rasus

தமிழ்நாட்டில் பாஜக அரசின் கைப்பாவையாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுகிறது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், "ஆளுநர் என்பவர் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இப்போது பாஜக அரசின் கைப்பாவையாக தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுகிறது. சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை நிறைவேற்ற, சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும்" என்றார்.