டிரெண்டிங்

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறது: நல்லகண்ணு

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறது: நல்லகண்ணு

webteam

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

திட்டப் பணிகள் குறித்த ஆளுநரின் ஆய்வு தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். அம்பத்தூரில் ‌செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமிழகத்தில் பதவியில் இருந்தாலும், அவசர காலக்கட்டத்தில் இருப்பது போல் ஆளுநர் ஆட்சியே தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.