மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
நாட்டில் பொருளாதார மந்தநிலை இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், மந்தநிலை இல்லையென மத்திய அரசு தெரிவித்து வருகின்றது. அதற்கு சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார சூழலை ஒப்பீடாக தெரிவிக்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
அத்துடன், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால்தான், ஆட்டோமொபைல் துறை பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், நாளை மீண்டும் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அரசு எடுத்துள்ள முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார் என கூறப்படுகிறது.