டிரெண்டிங்

ரம்யமான சூழல்... க்ளீன் கிரீன் நகரமாக மாறிய கொடைக்கானல்

kaleelrahman

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்றின் வேகத்தால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மே ஜுன் மாதங்களில் கொடைக்கானலில் நிலவும் ரம்யமான சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இதனால் கொடைக்கானல் நகரமே திக்கித் தினறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

வாகன போக்குவரத்து மற்றும் ஆள்நடமாட்டம் இல்லாததால் க்ளீன் கிரீன் நகரமாக மாறியிருக்கிறது கொடைக்கானல். இதனால் ஆடிமாதம் தொடக்கத்தில் இருந்தே காற்றின் வேகம் அதிகரித்ததோடு கடும் குளிரும் நிலவுகிறது. ரம்யமான சூழல் நிலவும் இந்த நாட்களில் காலைமுதல் பனிமூட்டங்கள் மலைசரிவுகளில் படர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

கொடைக்கானலில் உள்ள கீழ்மலை மேல்மலை மற்றும் நடுமலை பகுதிகளில் தொடர்ந்து சாரல்மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்யும் சாரல் மழையுடன் பனிமூட்டமும் காற்றும் சேர்ந்து கொள்வதால் மலைப்பகுதிகளில் குளிர் அதிகரித்து கோடைக்காலத்திற்கு விடை கொடுத்துள்ளது.